Designed by Iniyas LTD
அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா!
அவுஸ்திரேலிய – இந்திய அணிகளுக்கிடையில் நேற்று நடைபெற்ற முதலா வது இருபதுக்கு 20 போட்டியில் முத லில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 188 ஓட்டங்களைக் குவிக்க, வெற்றி இலக்கை துரத்திய ஆஸி.யின் விக்கெட்டுக்கள் மளமளவென சரிய 37 ஓட்டங்களால் இந்திய அணி வெற்றிபெற்றது.
மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரின் முதல் போட்டியில் முதலில் ஆடிய இந்தியா, 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 188 ஓட்டங்களைப் பெற்றது. விராட் கோஹ்லி 90 ஓட்டங்களையும், ரோஹித் ஷர்மா 31 ஓட்டங்களையும், ரெய்னா 41 ஓட்டங்களையும் விளாசினர்.
வெற்றி இலக்கைத் துரத்த களமிறங்கிய ஆஸி. 19.3 ஓவர்களில் 151 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. ஆஸி. சார்பில் பின்ச் அதிகூடிய ஓட்டமாக 44 ஓட்டங்களைப் பெற்றார். இந்திய அணியின் பந்துவீச்சாளர்களான பம்ரா 3, ஜடேஜா மற்றும் பாண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் வீழ்த்தினர்.