Designed by Iniyas LTD
ஆசிரியர் கூறி பலா மரத்தில் ஏறிய மாணவன் விழுந்து படுகாயம்!
ஆசிரியர் கூறியதற்கு அமைவாக பலா மரம் ஏறிய மாணவன் ஒருவன் மரத்தில் இருந்து கீழே விழுந்து, படுகாயமடைந்த நிலையில் நேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இரத்தினபுரி – பெல்மடுல பிரதேசத்தின் தெனவக்க தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 14 வயதான விஸ்வநாதன் விராஜ் என்ற சிறுவனே இவ்வாறு படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறுவனை பாடசாலையின் ஆசிரியை ஒருவரே பலாமரத்தில் ஏறி பலாக்காய் பறித்துத் தருமாறு கோரியதாகவும் இதனை அடுத்தே இந்தச் சிறுவன் மரத்தில் ஏறி விழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய பதிவு
இந்த நிலையில் சிறுவன் மேலதிக சிகிச்சைக்காக தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த ஆசிரியையை கஹவத்த பொலிஸார் கைதுசெய்துள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கஹவத்த பொலிஸார் தெவித்துள்ளனர்.