தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஆசிரியர் பணியிடங்களுக்கு நியமன ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு

ஆசிரியர் பணியிடங்களுக்கு நியமன ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு இன்று முதல் இணையதளம் மூலம் நடைபெற உள்ளது. ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான www.trb.tn.nic.in-ல் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் இடம் பெற்றுள்ள 14 ஆயிரத்து 700 ஆசிரியர்களுக்கு பணி நியமன கலந்தாய்வு நடைபெற உள்ளது.counselling

மாவட்டத்திற்குள் இருக்கும் முதுகலை ஆசிரியர் காலிபணியிடங்களுக்கான கலந்தாய்வு இன்றும், வேறு மாவட்டத்தில் உள்ள முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு நாளையும் கலந்தாய்வு நடைபெறுகிறது.

மாவட்டத்திற்குள் உள்ள இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 1-ம் தேதியும், வேறு மாவட்டத்தில் உள்ள இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 2-ம் தேதியும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்திற்குள் உள்ள பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 3 ஆம் தேதியும் வேறு மாவட்டத்தில் உள்ள பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள 32 மையங்களில் கலந்தாய்வு நடைபெறும் இடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

Comments
Loading...