Designed by Iniyas LTD
யாழில் கடந்த இரு வாரத்தில் 327 பேர் கைது
யாழில் அதிகரிக்கும் குற்றச் செயல்களை அடுத்து கடந்த இரு வாரத்தில் மட்டும் 327 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று யாழ். யாழ்.பிராந்திய சிரேஸ்ர காவல்துறை அத்தியட்சகர் விமலசேன தெரிவிததுள்ளார்.
இன்று காலை யாழ்.காவல்துறை நிலையத்தில் நடைபெற்ற மாதாந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேலும் தெரிவித்துள்ளார். இவ்விடையம் தொடர்பாக அவர் மேலும் தெரிரவிக்கையில்,
யாழ்.பிராந்தியத்திற்கு உட்பட்ட காவல்துறை நிலையங்களில் ஊடாக 206 பேரும் காங்கேசன்துறை காவல்துறை பிரிவின் கீழ் உள்ள காவல்துறை நிலையங்களில் ஊடாக 121 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவற்றில் அதிகப்படியான அடிதடி, வாள்வெட்டு போன்ற சம்பவங்களில் ஈடுபட்ட 58 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.