Designed by Iniyas LTD
ஆசிரியை தாக்கி மாணவன் வைத்தியசாலையில் அனுமதி!
மட்டக்களப்பு, காத்தான்குடியில் தரம் 5இல் கல்வி பயிலும் மாணவன், பிரத்தியோக வகுப்பு நடத்திய ஆசிரியையின் தாக்குதலுக்குள்ளான நிலையில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடிப் ஸ்ரீ பொலிஸார் தெரிவித்தனர்.
காத்தான்குடியிலுள்ள வித்தியாலயமொன்றில் கல்வி பயிலும் ஷாக்கிர் ரஹ்மான் (வயது 10) எனும் மாணவனே இவ்வாறு ஆசிரியையின் தாக்குதலுக்குள்ளான நிலையில் இன்று சனிக்கிழமை (11) காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் காத்தான்குடிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட மாணவனின் உறவினர் தெரிவித்தார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி ஸ்ரீ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.