Designed by Iniyas LTD
ஆசைவார்த்தைகளை கூறி தமிழ்மக்களையும் ஜெனிவாவுக்கு எதிராக அணிதிரட்டிய சிங்கள அடிவருடிகள்.

சிறீலங்காவுக்கு எதிரான ஜெனீவா பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பில் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. நேற்று காலை கிழக்கு மாகாண சிவில் பிரஜைகள் அமைப்பினர் அம்பாறை மாவட்டத்தில் இருந்து 3 பேரூந்துகளில் கொழும்பு வந்து ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
கொழும்பு நகர மண்டபத்தில் இருந்து நடை பவனியாக ஐக்கிய நாடுகளின் சிறீலங்காவுக்கான அலுவலகம் முன்பு வரை சென்று அவர்கள் தமது எதிர்ப்புகளைத் தெரிவித்தனர். அதன் பின்னர் அங்கிருந்து காலி வீதி வழியாக கொள்ளுப்பிட்டியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை அடைந்தனர்.
இந்த அமைப்பின் ஏற்பாட்டாளர் சீலன் அமெரிக்கத் தூதரக அதிகாரி ஒருவரிடம் ஜெனீவா மனித உரிமை கூட்டத் தொடரில் சிறீலங்காவுக்கு எதிராக மேற்கொண்டுள்ள தீர்மானத்துக்குத் தமது கண்டனத்தைத் தெரிவிக்கும் அறிக்கையைக் கையளித்தார்.
இது தொடர்பாக திருக்கோவிலில் அகதியாக வாழ்ந்து வந்த வயோதிபப் பெண் கருத்துத் தெரிவிக்கையில்,
நான் இப்போது திருக்கோவிலில் உள்ள கோவிலில் அகதியாக வாழ்ந்து வருகின்றேன். எனது வீட்டை சிங்களவர்கள் அபகரித்து விட்டார்கள். எங்களையும் அம்பாறையில் இருந்து சிங்கள மக்கள் துரத்தி விட்டார்கள். அந்த இடத்தையும் அவர்கள் பிடித்துவிட்டார்கள். இன்று கொழும்புக்கு எங்களுடன் வந்து சிறீலங்கா ஜனாதிபதியிடம் வீட்டைக் கேளுங்கள் என்று கூறிபொய் சொல்லித்தான் என்னை அழைத்து வந்தார்கள் என்று தெரிவித்தார்.