தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஆட்சி முடியும் தருவாயில், குறைகளை கேட்க “அம்மா அழைப்பு மையம்” – வைகோ

மக்கள் நலக்கூட்டணி சார்பாக சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசுகையில், மக்கள் நல கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்த பலர் எண்ணுகின்றனர் என பொரிந்து தள்ளிவிட்டார்.vaiko

‘மக்கள் நலக்கூட்டணி தேர்தல் வரையாவது நீடிக்குமா, தேர்தலில் போட்டியிடுமா அல்லது கூட்டணி உடைந்து விடுமா என சில பத்திரிகைகள் செய்தி வெளியிடுகின்றன. அரசியல் கட்சியினரும் இதே எண்ணத்துடன்தான் உள்ளனர். நாங்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம். சசிபெருமாள் மரணம், சமீபத்திய மழை வெள்ளம், ஐதராபாத் தலித் மாணவர் தற்கொலை விவகாரம் உள்பட பல பிரச்னைகளில் நாங்கள் ஒன்றாகத்தான் போராடி வருகிறோம்.

தினமும் சந்தித்து பேசுகிறோம். நாளுக்கு நாள் மக்கள் நலக் கூட்டணியில் உள்ள கட்சி நிர்வாகிகளுக்குள் புரிதல் அதிகரித்து வருகிறது’ என்றார். கடைசியாக, அம்மா அழைப்பு மையம் எதற்காக என்பது பற்றியும் அம்பலப்படுத்தினார். ‘நாலே முக்கால் ஆண்டு மக்களை சந்திக்காமல், ஆட்சி முடியும் தருவாயில், குறைகளை கேட்க ‘அம்மா அழைப்பு மையம்’ துவங்கப்பட்டுள்ளது. இது குறைகளை கேட்க அல்ல. எங்கள் தெருவில் “ஓட்டுக்கு இன்னும் பணம் வரவில்லை” என மக்கள் தெரிவிப்பதற்காக இந்த மையம் துவங்கப்பட்டுள்ளது’ என்றார். அட..இதுக்காகத்தான் அந்த மையமா

Comments
Loading...