தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஆணைக்குழு முன் சாட்சியமளிப்பவர்களுக்கு நடவடிக்கை எடுப்போம் – சிறீலங்கா புலனாய்வாளர்கள் மிரட்டல்

முல்லைத்தீவில் காணாமல்போனார் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கக் கூடாது என புலனாய்வுப் பிரிவினர் பாதிக்கப்பட்ட மக்களை அச்சுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காணாமல்போனோர் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஐந்தாம் கட்ட அமர்வு இன்று சனிக்கிழமை 05/07/2014 முல்லைத்தீவில் நடைபெற்றது.இந்த அமர்வில் சாட்சியமளிப்பதற்காக முல்லைத்தீவைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்புக் கடிதங்களை அனுப்பியிருந்தது.srilanka-

இவ்வாறு கடிதம் அனுப்பப்பட்டவர்களின் வீடுகளுக்குச் சென்ற புலனாய்வுப் பிரிவினர், “ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் நீங்கள் சாட்சியமளிக்கக்கூடாது, அவ்வாறு சாட்சியமளித்தால் உங்களுக்கெதிராக நாம் சில நடவடிக்கைகள் எடுப்போம்.நீங்கள் எங்களிடம் வந்தால் காணாமற்போனவர்களுக்கு மரணச் சான்று தருவோம்” என்று கூறி அச்சுறுத்தியதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, வட மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன், தன்னிடம் அச்சுறுத்தலுக்குள்ளான சிலர் இதுகுறித்து தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.மேலும், அச்சுறுத்தப்பட்டவர்களை ஆணைக்குழு அமர்வுக்கு அழைத்துச்சென்று சாட்சியமளிக்க தான் ஏற்பாடு செய்வேன் என்றும் தெரிவித்தார்.

Comments
Loading...