Designed by Iniyas LTD
ஆண்ட்ராய்ட் மொபைல்களை தாக்கும் வைரஸ் இந்தியாவில்!
மென்பொருள் பாதுகாப்பு நிறுவனமான டிரெண்ட் மைக்ரோ திரட்டிய தகவல்படி காட்லெஸ் எனும் வைரஸ், ஆண்ட்ராய்ட் மொபைல் பயன்படுத்துபவர்கள் சில அப்ளிகேசன்களை டவுண்லோடு செய்யும் போது, அதன் வழியாக உள்ளே நுழையும் காட்லெஸ் வைரஸ், அந்த போனின் இயங்குதளத்தை(os) பாதிப்பதாகவும், இதனால் தேவையில்லாத அப்ளிகேசன்கள் தானாகவே இன்ஸ்டால் ஆகிவிடுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
கூகுள் பிளே ஸ்டோர் உட்பட முக்கிய அப் ஸ்டோர்களில் இருந்து டவுண்லோடு செய்யப்படும் அப்ளிகேசன்கள் மூலமாக இந்த வைரஸ் வேகமாக பரவுவதாக டிரெண்ட் மைக்ரோ தெரிவித்துள்ளது.
ஆண்ட்ராய்ட் 5.1 அல்லது அதற்கு முந்தைய ஆண்ட்ராய்ட் வெர்சனை கொண்ட அனைத்து போன்களையும் இந்த வைரஸ் தாக்குகிறது. எனவே தற்போது உலகில் பயன்பாட்டில் உள்ள 90 சதவீத ஆண்ட்ராய்ட் போன்களை இந்த வைரஸ் தாக்கும் அபாயம் உள்ளது. காட்லெஸ் இதுவரை 8.5 லட்சம் போன்களை தாக்கியுள்ளது. இதில் பாதியளவு இந்தியாவை சேர்ந்தவை.
காட்லெஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க வேண்டுமானால் ஒரு அப்-ஐ டவுண்லோடு செய்யும் போது, அதை உருவாக்கியவர்களின் தகவல்களை படித்து பார்த்து உறுதி செய்துக்கொள்ள வேண்டும். ஒரு குறிப்பிட்ட அப்ளிகேசனில் அதை உருவாக்கியவர்களின் தகவல்கள் குறைவாகவோ அல்லது முற்றிலும் இல்லாமலோ இருந்தால் அதனை டவுண்லோடு செய்வதை தவிர்க்க வேண்டும்.