தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஆப்கானிஸ்தான் அதிபரின் சிறிலங்கா பயணம் திடீர் ரத்து !

v01_3655E05DCAA6D690FAAF814E01FFDF52சிறிலங்காவுக்கு இன்று அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த, ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீட் கர்சாய் தனது பயணத்தை இறுதிநேரத்தில் கைவிட்டுள்ளார். ஆப்கானிஸ்தானின் கிழக்கிலுள்ள கனார் மாவட்டத்தில், தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 17 ஆப்கானிஸ்தான் படையினர் கொல்லப்பட்டு, 6 பேர் காணாமற்போயுள்ளதை அடுத்தே, இந்தப் பயணம் கைவிடப்பட்டதாக, ஆப்கான் அரசாங்க வட்டாரங்கள் கூறியுள்ளன.

எனினும், ஆப்கானிஸ்தானில் இது போன்ற தாக்குதல்கள் வழக்கமானதே  என்பதால், அதிபரின் சிறிலங்கா ப் பயணம் தடைப்பட்டதற்கு வேறு காரணங்கள் இருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று தொடக்கம் மூன்று நாட்கள் சிறிலங்காவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள ஆப்காஸ் அதிபர் திட்டமிட்டிருந்தார். இதன் போது, மூன்று புரிந்துணர்வு உடன்பாடுகளும், ஒரு உடன்பாடும், கையெழுத்திடத் திட்டமிடப்பட்டிருந்தது.  ஆப்கானிஸ்தான் அதிபரின் சிறிலங்கா பயணம் எப்போது என்று இன்னமும் அறிவிக்கப்படவில்லை.

Comments
Loading...