தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கொள்ளையர்களுக்கு துப்பாக்கி வழங்கிய சிறிலங்கா இராணுவ அதிகாரி !

SANYO DIGITAL CAMERAபாதுக்கை நகரிலுள்ள நகைக் கடையொன்றில், ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான நகை மற்றும் பணத்தை கொள்ளையிட்டு தப்பிச்சென்ற சந்தேகநபர்களுக்கு, துப்பாக்கியை வழங்கிய இராணுவ லெப்டினன் மிரிஹான சிறிலங்கா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 அப்பகுதியில் சேவையாற்றும் இராணுவ லெப்டினன் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா ஊடகப் பேச்சாளரும், காவற்துறை அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவிக்கின்றார். துப்பாக்கியை வழங்கியமைக்காக கொள்ளையில் ஈடுபட்ட சந்தேகநபர்கள், அவருக்கு 120 கிராம் தங்கம் வழங்கியுள்ளமை விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்த கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவற்துறை சார்பாக கூறப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் பயணித்த 02 மோட்டார் சைக்கிள்களும், கொள்ளையிடப்பட்ட 1,870 கிராம் தங்கத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

Comments
Loading...