தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஆப்கான் தொலைக்காட்சி நிறுவனத்தில் தாக்குதல்!

ஆப்கானிஸ்தானில் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் பயங்கரவாதிகள் சிலர் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஷம்ஷத் என்ற தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு துப்பாக்கி உள்ளிட்ட சில ஆயுதங்களுடன் மூன்று மர்ம நபர்கள் திடீரென புகுந்துள்ளனர். உள்ள சென்ற உடனே கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதோடு துப்பாக்கி சூடும் நடத்தியுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் தொலைக்காட்சி நிறுவனத்தில் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு

இதனையடுத்து இந்த சம்பவம் அறிந்து விரைந்து வந்த பாதுகாப்பு படையினர், எதிர் தாக்குதல் நடத்தி நிலையை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தினால் அந்த தொலைக்காட்சியின் அனைத்து நிகழ்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடைபெற்ற இடத்தில் பலரும் பயங்கரவாதிகளிடம் சிக்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் இந்த தாக்குதலில் உயிர் சேதம் ஏதும் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக அம்புலன்சும் சம்பவ இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அங்கு நடக்கும் தாக்குதல்களுக்கு பொறுப்பேற்கும் தலீபான் பயங்கரவாத இயக்கம், இந்த தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளனர். இதனால் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Comments
Loading...