தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஆப்ரிக்கன் கோப்பைக்கான கால்பந்து லீக் போட்டி

ஆப்ரிக்கன் கோப்பைக்கான கால்பந்து லீக் போட்டி ஒன்றில் கானா அணி 1-0 என்ற கோல்கணக்கில் அல்ஜீரியா அணியை வீழ்த்தியது.football6

ஈக்வடேரியல் கினீயா நாட்டில் உள்ள மோங்கோமோ நகரில் இந்த போட்டி நடைபெற்றது. ஆட்டத்தின் தொடக்கும் முதல் கானா அணியின் ஆதிக்கமே காணப்பட்டது. அவர்களிடம் இருந்து பந்தைப்பறிக்க அல்ஜீரிய வீரர்கள் திணறினர். முழுக்க பந்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும் கானா அணி வீரர்களால் இரு பாதியிலும் கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் கானா அணி வீரர் க்யான் கோல் அடித்து அல்ஜீரியர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தார்.

இதனால் அந்த அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதையடுத்து தென் ஆப்ரிக்கா – செனகல் அணிகள் இடையே நடைபெற்ற ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. ஆட்டத்தின் 47-வது நிமிடம் தென் ஆப்ரிக்க வீரர் மன்யிஷா கோல் அடித்து முன்னிலை பெற்று தந்தார். இதையடுத்து போராடிய செனகல் வீரர்கள் ஆவேசத்துடன் விளையாடினர். இதனால் 60-வது நிமிடம் செனகல் வீரர் போட்ஜி பதில் கோல் அடித்தார். இதையடுத்து வெற்றி கோல் அடிக்க இரு அணியினரும் போராடினர் ஆனால் கோல் அடிக்க முடியாததால் ஆட்டம் சமனில் முடிவடைந்தது.

Comments
Loading...