Designed by Iniyas LTD
இந்தியாவின் பயஸ் மற்றும் சானியா ஜோடிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பயஸ் மற்றும் சானியா ஜோடிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன.
கலப்பு இரட்டையர் பிரிவு இரண்டாவது சுற்று ஆட்டம் ஒன்றில், லியாண்டர் பயஸ்- சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் இணை, ஸ்பெயினின் பப்லோ அந்துஜார்-மெடிநா இணையை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில் பயஸ் இணை 6-3, 6-1 என்ற நேர்செட்களில் எளிதில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறியது. மற்றொரு ஆட்டத்தில், இந்தியாவின் சானியா மிர்சா, பிரேசிலின் புருனோ சோர்ஸ் இணை அமெரிக்காவின் அபிகெயில் மெக்சிகோவின் சான்டியாகோ இணையை எதிர்த்து விளையாடியது. சவால் மிகுந்த இந்தப்போட்டியில் சானியா இணை 7-5, 6-7, 10-8 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.