Designed by Iniyas LTD
ஆயுதம் வழங்கினால் ஐ.எஸ் தீவிரவாதிகள் பறித்து விடுவார்கள் – உள்ளூர் தகவல்
ஈராக் மற்றும் சிரியாவின் பல பகுதிகளை கைப்பற்றி உள்ள ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாதிகள் அதை இஸ்லாமிய அரசாக அறிவித்து உள்ளனர். தீவிரவாதிகளுக்கு எதிராக ஈராக் மற்றும் சிரிய ராணுவத்தினர் போராடி வருகின்றர். மேலும் அமெரிக்க அரேபிய நாடுகள் மற்றும் தனது கூட்டணி நாடுகள் உதவியுடன் வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது.
அமெரிக்க தலைமையிலான வான்வழி தாக்குதல்கள் ஈராக் ராணுவத்தை விட இஸ்லாமிய அரசுக்குஎதிராக குறைந்த பயனுள்ளதாக இருக்கும். குர்தீஷ் படையினருக்கு ஆயுதம் வழங்கினால் அதை ஐ.எஸ் தீவிரவாதிகள் பறித்து விடுவார்கள் என உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈராக் சட்ட கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹனான் பத்லாவி விடுத்துள்ள அறிக்கையில் கடந்த மாதாம் அமெரிக்க படைகள் வான்வழியாக குர்தீஷ் படைகளுக்கு சிரியாவின் கோபேனி நகரில் ஆயுதங்கள வீசினர் அதை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கைப்பற்றி கொண்டனர்.
ஈராக் மற்றும் சிரியாவில் தற்போது நடைபெற்று வரும் அமெரிக்கா மற்றும் கூட்டணி படையினரின் வான்வழி தாக்குதல்கள் குர்தீஷ் ,மற்றும் சிரியாசுதந்திர ராணுவ படையினருக்கும் உதவுவதற்காகவும் தீவிரவாதிகளை பின்னுக்கு தள்ளவும் நடத்தப்படுகிறது.
இந்த வான் வழி தாக்குதல்களால் ஐ.எஸ் தீவிரவாதிகளை தோற்கடிக்க முடியாது. தரைபோரில் ஈடுபட்டு ஈராக் ராணுவம் மற்றும் தொண்டர்கல் வெற்றி பெற்று வருகிறார்கள். ஈராக் படைக்கு அதிக எண்ணிக்கையிலான சர்வதேச ஆலோசகர்கள் அவசியம் இல்லை . இது ஒரு போர் இது ஒரு பயிற்சி முகாம் அல்ல. இது சண்டை யிடும் நேரம் ஆகும். அமெரிக்க மீண்டும் ஈராக்கிற்கு திரும்பி வரும் முயற்சி இது என நான் நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.