தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

காபூலில் இங்கிலாந்து தூதர வாகனம் மீது தற்கொலை தாக்குதல்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இங்கிலாந்து தூதர வாகனம் மீது  தீவிரவாதிகளின் தற்கொலை படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் இங்கிலாந்தை சேர்ந்தவர் உள்பட 5 பேர் கொல்லப்ட்டனர் 30 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த வாகனத்தில் இங்காலாந்து தூதரகத்தை சேர்ந்த எந்த அதிகாரிகளும் பயணம் செய்யவில்லை.Car_Bomb

தற்கொலை வீரர் தனது உடம்பில் குண்டுகளை கட்டிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்து வாகனம் மீது மோதி உள்ளார். குண்டு வெடிப்பு நடைபெற்ற பகுதியில் வெளிநாட்டு நிறுவனங்கள், சர்வதேச ராணுவ முகாம்கள் அமைந்து உள்ளன.இந்த குண்டு வெடிப்புக்கு ஆப்கானிஸ்தானை சேர்ந்த தலிபான் தீவிரவாதிகள் பொறுப்பேற்று உள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பக்டிகா என்ற பகுதியில் நடைபெற்ற வாலிபால் போட்டியின் போது  தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்டனர் எனபது குறிப்பிட தக்கது.

Comments
Loading...