தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி; சசிகலா அணியினர் டெபாசிட் இழப்பது உறுதி தீபா ஆவேச பேட்டி

deepaஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவேன் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 23-ம் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனு தாக்கலுக்கு ஒரு நாள் மட்டுமே அவகாசம் தரப்பட்டுள்ளது. மறுநாள், அதாவது மார்ச் 24-ம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகின்றன.

மனுக்களை வாபஸ் பெற மார்ச் 27-ம் தேதி கடைசி நாள். ஏப்ரல் 12-ம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, 15-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆர்.கே. நகரில் போட்டியிடுவது குறித்து இன்று மாலை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா கூறியதாவது: –

விரட்டியடிக்கப்பட்ட சதிகார கும்பலை மக்கள் ஏற்கமாட்டார்கள். ஆர்.கே.நகர் மக்கள் நல்ல தீர்ப்பு வழங்குகவார்கள். எனது ஆதரவாளர்களை என்றுமே நான் புறக்கணிக்க மாட்டேன் என்று கூறினார்.

பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்பட எந்த தயக்கமும் இல்லை. இணைந்து செயல்படவேண்டும் என்றால் அவர்கள் தான் முன்வர வேண்டும். சசிகலா மற்றும திமுகவை தவிர பிறர் ஆதரவு அளித்தால் ஏற்றுக்கொள்வேன். யாருடன் ஆதரவு கோரவில்லை,ஆதரவு அளித்தால் புறக்கணிக்க மாட்டேன்.

ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவைக்கு ஆதரவு தருவார்கள். ஜெயலலிதாவின் வாரிசு யார் என்பதை ஆர்.கே.நகர் மக்கள் முடிவு செய்வார்கள். எனக்கும் கணவருக்கும் எந்த கருத்துவேறுபாடும் இல்லை. நிர்வாக பட்டியல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும். ஆர்.கே.நகர் சுற்றுப்பயண திட்டத்தை விரைவில் அறிவிப்பேன். ஜெயலலிதாவின் சிகிச்சை குறித்த அறிக்கை ஏற்புடையதாக இல்லை. மருத்துவ அறிக்கையின் மூலம் எந்த உண்மையும் வெளிவரவில்லை. அப்பல்லோவிடம் கேள்வி எழுப்பலாம் என முடிவு செய்துள்ளேன். சசிகலா தலைமையிலான அணியை தான் பிரதானமாக எதிர்ப்பேன். சசிகலா அணியினர் டெபாசிட் இழப்பது உறுதி. சசிகலா அணியுடன் எந்த காலத்திலும் இணைந்து செயல்பட மாட்டேன். ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவைக்கு ஆதரவு தருவார்கள். மக்கள் ஆதரவு அளித்து வெற்றியை ஏற்படுத்தி தருவார்கள் என நம்புகிறேன்

 

Comments
Loading...