Designed by Iniyas LTD
மத்திய அரசிடம் நெடுவாசல் மக்களின் உணர்வுகளை எடுத்துரைப்பேன்: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராடும் நெடுவாசல் மக்களுடன் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று சந்தித்து பேசினார். அப்போது போராட்டத்தை கைவிடுமாறு நெடுவாசல் கிராம மக்களிடம் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
மேலும் அவர் கூறும் போது நானும் விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவன்தான் விவசாயிகளின் கஷ்டங்களை அறிவேன். மத்திய அரசு ஏந்த திட்டத்தையும் மக்கள் மீது மத்திய அரசு திணிக்காது. நெடுவாசல் மக்களின் உணர்வுகளை மத்திய அரசிடம் எடுத்துரைப்பேன்.
இங்கு வந்தபின்தான் நெடுவாசலின் செழிப்பு புரிந்தது புதுக்கோட்டை மாவட்டத்திலும் மிளகு விளைவதையும் இப்போதுதான் அறிந்து கொண்டேன். வரும் மார்ச் 15 அல்லது 16-ம் தேதி மத்திய பெட்ரோலிய துறை அமைச்சருடன் பேச்சு வார்த்தை நடத்த ஏற்பாடு செய்கிறேன் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசலில் 22-வது நாளாகப் போராட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.