தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்

TNEC0610_01சென்னையில் ஆர்.கே.நகர்  தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு புதன்கிழமை (ஜூன் 3) தொடங்குகிறது.

மேலும் இந்தத் தேர்தலில் அதிமுக சார்பில் மட்டுமே வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிற கட்சிகள் யாரும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. வேட்புமனு தாக்கல் செய்ய வருகின்ற 10-ஆம் தேதி கடைசி நாளாகும்.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா, அந்தக் கட்சி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். வேட்புமனு தாக்கல் செய்ய தண்டையார்பேட்டையில் தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரியாக சென்னை மாநகராட்சி மண்டல அதிகாரி சௌரிராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இடைத்தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள், வரும் 11-ஆம் தேதி பரிசீலனை செய்யப்படவுள்ளன. மனுக்களைத் திரும்பப் பெற ஜூன் 13-ஆம் தேதி கடைசி நாளாகும். வாக்குப் பதிவு ஜூன் 27-ஆம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Comments
Loading...