Designed by Iniyas LTD
இந்திய கிரிக்கெட் அணி : இடைக்கால பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமனம்
இந்திய கிரிக்கெட் அணியின் இடைக்கால பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போதும், உலகக்கோப்பை போட்டியின் போதும் அணியின் மேலாளராக ரவி சாஸ்திரி செயல்பட்டார்.
இந்தநிலையில் பயிற்சியாளராக டன்கன் பிளச்சரின் ஒப்பந்த கால முடிவடைந்துள்ளது. எனினும் இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் இதுவரை நியமிக்கப்படவில்லை.
எனவே இந்திய அணி வரும் பத்தாம் தேதி முதல் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதால், முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி இடைக்கால பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.