Designed by Iniyas LTD
ஆற்றுக்குள் இறங்கிய அமெரிக்கா போயிங் விமானம் – அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 140 பேர்..
அமெரிக்காவின் போயிங் விமானம் ஒன்று ஆற்றுக்குள் இறங்கிய விபத்தில் ஊழியர்கள், பயணிகள் என 140 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
கியூபாவின் குவாண்டனமோ விரிகுடாவில் இருந்து 136 பயணிகள் மற்றும் ஊழியர்கள் என 140 பேரை சுமந்து கொண்டு மியாமி நிறுவனத்தின், போயிங் 737 விமானமானது அமெரிக்காவின் புளோரிடா சென்றது.

இதன்போது ஜாக்சன்வில்லே விமான நிலையத்தில் தரை இறங்க முற்படுகையில் கனமழை பெய்து கொண்டிருந்ததனால் விமானம், சறுக்கிச் சென்றுள்ளது.
சென்ற வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த விமானம், ஓடுதளம் அருகே உள்ள செயிண்ட் ஜான்ஸ் ஆற்றுக்குள் இறங்கியது.
எனினும் விமானம் மூழ்கும் அளவிற்கு ஆற்றில் தண்ணீர் இல்லாத காரணத்தால் அதில் இருந்த ஊழியர்கள், பயணிகள் என 140 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளனர்.
விமான நிலையத்திற்கு அருகே கடற்படைத் தளம் உள்ளதால் உடனடியாக கடற்படை வீரர்களும், மீட்புக் குழுவினர் அங்கு விரைந்து பயணிகளையும், ஊழியர்களையும் பத்திரமாக மீட்டுள்ளனர்.