தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கொலம்பியாவில் விமானம் விபத்து – விமானி உட்பட 12 பேர் உயிரிழப்பு…

கொலம்பியாவில் ஏற்பட்ட விமான விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொலம்பியா சான் ஜோஸ் (San Jose) நகரில் இருந்து வில்லாவின் சென்ஸியோ (Villavicencio) இடத்திற்கு விமானம்  சென்று கொண்டிருந்தது.

லேசர் ஏரியோ (Laser Aereo) நிறுவனத்திற்குச் சொந்தமான அந்த சிறிய ரக விமானத்தில் விமானத்தில் விமானி மற்றும் பயணிகள்  12 பேர் இருந்தனர்.

இந்நிலையில் வில்லாவின் சென்ஸியோ அருகில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளாயுள்ளது.

இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

Comments
Loading...