தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஆளுநரை நியமிக்க முன் சிந்தித்திருக்க வேண்டும் – கெஹலிய

மத்திய வங்கியின் புதிய ஆளுநரை  நியமிக்க முன்னதாக அரசாங்கம் ஒன்றுக்கு பத்து தடவைகள் சிந்தனை செய்திருக்க வேண்டுமென முன்னாள் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.Keheliya Rambukwella

அவர் மேலும் கூறுகையில், மத்திய வங்கியின் ஆளுநர்  கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமியின் கல்வி மற்றும் தொழில்சார் தகைமைகள் குறித்து எவ்வித பிரச்சினைகளும் கிடையாது. எனினும் அவரது கடந்த காலம் n;தாடர்பிலும், நாடு எதிர்நோக்கியுள்ள ஆபத்தான நிலைமைகளை கருத்திற் கொண்டும் சரியான தீர்மானம் எடுத்திருக்க வேண்டும். மத்திய வங்கியின் ஆளுநர்  பதவிக்கு அரசாங்க அதிகாரி ஒருவரை நியமித்திருக்க வேண்டும். நான் பிரதிநிதித்துவம் செய்த கடந்த அரசாங்சகம் இந்த தவறை முதலில் விட்டது என கெஹலிய தெரிவித்துள்ளார்.

Comments
Loading...