தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஆள் மாறாட்டத்தில் தொழிலாளி கொலை? வக்கீல் கைது

arrest-copy3-400x260திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது45). தச்சு தொழிலாளி. கடந்த ஜூலை 19-ந் தேதி இவர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இது குறித்து வடமதுரை போலீசார் வழகுப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் மாரியப்பன் ஆள்மாறாட்டம் காரணமாக கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

இந்த கொலையில் தொடர்புடைய மதுரை எஸ்.எஸ். காலனியை சேர்ந்த வக்கீல் செந்தமிழ்செல்வன் (36), பெத்தானியாபுரம் பிரவின் (29), சொக்கலிங்கநகர் அஸ்ரப் (28) உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் வக்கீல் செந்தமிழ்செல்வன் மீது ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள் உள்ளன.

இதையடுத்து அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை மேற்கொண்டார். இதனை ஏற்று கலெக்டர் பொறுப்பு அதிகாரி உத்தரவிட்டதை அடுத்து வக்கீல் செந்தமிழ்செல்வன் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Comments
Loading...