தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஆவா குழு தீவிரவாத அமைப்பு அல்ல – பிரதியமைச்சர்..

வடக்கில் செயற்படும் ஆவா குழு தீவிரவாத அமைப்பு அல்ல என  சட்டம் ஒழுங்குப் பிரதியமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெற்கில் வதந்திகள் பரப்பப்படுவது போன்று ஆவா குழு ஒன்றும் தீவிரவாத அமைப்பு அல்ல என்றும் .அந்தக் குழு யாரையும் கொலை செய்யவில்லை எனவும் ,. யாருக்கும் கடுமையான காயங்களையும் ஏற்படுத்தவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் திரைப்படங்களின் வன்முறைக் காட்சிகளின் ஆதிக்கத்தினால் சில இளைஞர்கள் ஆவா குழுவாக இயங்குகின்றதாகவும்  அவர் கூறியுள்ளார்.

அண்மையில் தான் வடக்கிற்கு ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டிருந்போதே   இதனை புரிந்து கொள்ள முடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இத்தகைய செயல்களில் ஈடுபடும் இளைஞர்களுக்கு  புனர்வாழ்வுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு, பெற்றோருடன் அவர்களை  ஒருங்கிணைக்க நடவடிக்கை எடுக்க உள்ளதகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...