தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சபரிமலையில் வழிபட பெண்களுக்கும் அனுமதி…

இந்தியா கேரளா மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 முதல் 50 வயதிற்குட்பட்ட பெண்கள் வழிபாட்டிற்கு அனுமதிக்கப்படுவது கிடையாது என்பது அனைவரும் அறிந்ததே..

இந்நிலையில் மிக நீண்டகாலமாக நடைமுறையிலிருந்து வரும் இந்த வழக்கத்திற்கு தடை விதிக்க வேண்டும். அனைத்துப் பெண்களையும் கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆண்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த  வழக்கு ஐந்து நீதிபதிகள் கொண்ட சட்ட அமா்வுக்கு மாற்றம் செய்யப்பட்டு,  தொடா்ந்து நடைபெற்ற விசாரணையின் போது,

ஆண்கள் உட்பட அனைத்துப் பெண்களும் இறைவனால் உருவாக்கப்படுபவா்கள் என நம்பும் போது பெண்களை எதற்காக வழிபாட்டுக்கு அனுமதிக்கக் கூடாது? என நீதிபதியொருவா் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதன்போது  குறுக்கிட்ட மாநில அமைச்சா் கே.சுரேந்திரன் கோயிலுக்குள் அனைத்துத் தரப்புப் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்பது தான் மாநில அரசின் நோக்கம் எனவும் தொிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து  சபரிமலை ஐயப்பன் கோயிலில் வழிபட ஆண்களைப் போன்று பெண்களுக்கும் உரிமை உண்டு என உச்சநீதிமன்றம் தொிவித்துள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...