Designed by Iniyas LTD
ஆஸிக்கெதிரான ஒரு நாள் கிரிக்கெட்டில் இலங்கை படுதோல்வி!
இலங்கை – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பல்லேகெலேயில் இன்று தொடங்கியது. இலங்கை அணியின் கேப்டன் மேத்யூஸ் காயம் காரணமாக இடம்பெறவில்லை. இதனால் விக்கெட் கீப்பர் சண்டிமால் கேப்டன் பதவியை ஏற்றார்.
டாஸ் வென்ற சண்டிமால் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி அந்த அணியின் தனஞ்செயா டி சில்வா, தனுஷ்கா குணதிலகா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் ஸ்டாக், ஹாஸ்டிங் மற்றும் போலந்து ஆகியோரின் வேகத்தை சமாளித்து ரன்கள் சேர்த்தனர்.
இருவரும் முதல் விக்கெட்டுக்கு 73 ரன்கள் சேர்த்து சிறப்பான அடித்தளம் அமைத்தனர். 13.5 ஓவரில் 73 ரன்கள் எடுத்திருக்கும்போது இலங்கை அணி முதல் விக்கெட்டை இழந்தது. டி சில்வா 47 பந்தில் 34 ரன்கள் சேர்த்தார். அடுத்து குசால் மெண்டிஸ் களம் இறங்கினார்கள்.
குணதிலகா 39 ரன்களும், மெண்டிஸ் 33 ரன்களும் சேர்த்து ஆட்டம் இழந்தனர். அதன்பன் வந்தவர்கள் சொற்ப ரன்களில் வெளியேறி இலங்கை அணி 40.2 ஓவர்களிலேயே 195 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
ஆஸ்திரேலியா அணி சார்பில் ஸ்டார்க் 3 விக்கெட்டும், சம்பா மற்றும் ஹெட் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்து வருகிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால் தொடரை 4-1 எனக் கைப்பற்றும்.