தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியில் யுவராஜ் சிங், ஆஷிஷ் நெக்ராவிற்கு வாய்ப்பு

newsid_4253-Yuvraj-Singhஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணிகள் வீரர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. 20 ஓவர் போட்டிகளில் விளையாட யுவராஜ் சிங்கிற்கும், ஆஷிஷ் நெக்ராவிற்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

 டெல்லியில் நடைபெற்ற தேர்வுக் குழு கூட்டத்தில் ஒரு நாள் மற்றும் 20 ஓவர் அணி ஆகிய இரண்டுக்குமே தோனி கேப்டனாக இருப்பார் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

 ஒரு நாள் போட்டிக்கான அணியில் எம்.எஸ் தோனி, ஷிகர்தவான், ரோகித் ஷர்மா, விராத் கோலி, ரஹானே, மனிஷ் பாண்டே, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, அக்ஸர் படேல், இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், குர்கீரட் சிங் மான், ரிஷி தவான், பிரெய்ன்டர் பல்பீர்சிங் சரண் ‌ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். பஞ்சாபைச் சேர்ந்த பரிந்தர் சரண், அணியில் இடம்பெற்றுள்ள புதுமுகமாவார்.

 20 ஓவர் அணியில் எம்.எஸ் தோனி, ஷிகர் தவான், ரோகித் ஷர்மா, விராட் கோலி, ரஹானே, யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஹர்பஜன் சிங், உமேஷ் யாதவ், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஆஷிஷ் நெக்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

 ஆஸ்திரேலியவுக்கு அடுத்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, அந்நாட்டுடன் 5 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடவுள்ளது.

Comments
Loading...