Designed by Iniyas LTD
இங்கிலாந்து பீறீமியர் லீக் தொடரில் மன்செஸ்டர் யுனைற்ரட் – ஆர்சனல் அணி மோதல்
இங்கிலாந்து பீறீமியர் லீக் தொடரில் மன்செஸ்டர் யுனைற்ரட் அணியும் ஆர்சனல் அணியும் மோதிய நேற்றைய ஆட்டத்தில் ஆர்சனல் அணி வெற்றிபெற்றுள்ளது. ஆட்டத்தின் ஆரம்பத்தில் யுனைற்ரட் தனக்கு கிடைத்த வாய்ப்பை வீணடித்தது.
நீண்ட இழுபறியின் பின்னர் 33ஆவது நிமிடத்தில் முதல் கோலை பதிவுசெய்து முன்னிலை வகிக்க ஆரம்பித்தது ஆர்சனல். பின்னர் முதற்பாதியின் இறுதி நிமிடத்தில் மேசூத் ஒசிலிடம் இருந்து பந்தைப் பெற்ற ஒலிவர் ஜிரோட், அதைக் கோலாக்கி ஆர்சனலுக்கு 2:0 என்ற முன்னிலையை வழங்கினார். இரண்டாவது பாதியின் 82ஆவது நிமிடத்தில் பதில்கோலை பதிவுசெய்தது மன்செஸ்டர் யுனைற்ரட். இருப்பினும் வேறெந்த கோல்களும் பதியப்படாத நிலையில் 2:1 என்று வெற்றிபெற்றது ஆர்சனல்.