தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இடைக்காட்டு பகுதியில் இளைஞர் ஒருவர் குளத்தில் மூழ்கி இறந்துள்ளார்.

முல்லைதீவு இடைக்காட்டு பகுதியில் இளைஞர் ஒருவர் குளத்தில் மூழ்கி இறந்துள்ளார்.

தமது பிடியில் இருந்த தப்பிப்பதற்காக குறித்த இளைஞர் குளத்தில் பாய்ந்ததாக முல்லைதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்றுமாலை இடம்பெற்றதாகவும், உயிரிழந்த நபர் உடையார் கட்டை சேர்ந்த  27 வயதுடைய  மகேஸ்வரன் இராமகிருஸ்ணன் என கூறப்பட்டுள்ளது.

இளைஞர்கள் சிலர் காட்டுபகுதியில் மது அருந்துவதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து அப்பகுதிக்கு சென்ற பொலிஸார் அவர்களை பிடிப்பதற்காக விரட்டியபோதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்ட்டுள்ளது.

 

Comments
Loading...