Designed by Iniyas LTD
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் இராணுவ தளபதிக்கு நன்றி தெரிவித்து காவடி
வலி. வடக்கில் 683 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால பிரதமர் ரணில் மற்றும் இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்கவுக்கும் நன்றி தெரிவித்து அவர்களின் படங்களைத் தாங்கியபடி அலகு குத்திஒருவர் காவடி எடுத்துள்ளதாக தெர்விக்கப்பட்டுள்ளது.
மயிலிட்டியைச் சேர்ந்த மு. இன்பராசா என்பவரே இவ்வாறு காவடி எடுத்துள்ளார்.
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் இராணுவ தளபதி ஆகியோரின் படங்களைக் கழுத்தில் மாட்டிக்கொண்டு காவடியுடன் அவர் நடந்து சென்றமை பார்ப்பதற்கு விநோத காட்சியாக இருந்தது.
28 வருடங்களுக்குப் பின் எமது சொந்த இடங்களுக்குச் செல்கிறோம். ஒரு கனவு நனவாகியது போல உள்ளதாகவும், . அனைவருக்கும் நன்றி செலுத்தும் வகையில் தான் இதனை ஒரு நேர்த்தியாக செய்துள்லதாகவும் இன்பராசா தெரிவித்துள்ளார்.