Designed by Iniyas LTD
இணுவில் பகுதியில் சிறுவன் உயிரிழந்த விபத்து தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தர் கைது…
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்திருந்தார்.
சம்பவம் தொடர்பில் விபத்தை ஏற்படுத்திய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை சுன்னாகம் பொலிஸார் கைதுசெய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
நுவரெலியாவில் இருந்து இடமாற்றம் பெற்று யாழ்ப்பாணத்திற்கு சென்ற ரி.திவாகரன் என்ற பொலிஸ் உத்தியோகத்தரே சுன்னாகம் பொலிஸாரினால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தைப்பொங்கல் தினத்தன்று இணுவில் 7 ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் படுகாயமடைந்த நிலையில் 12 வயது சிறுவன் உயிரிழந்திருந்தார்.
இந்த விபத்தின் போது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் விபத்து தொடர்பில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, பொலிஸ் உத்தியோகத்தர் ஓட்டி வந்த முச்சக்கரவண்டி மோதியே விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை கைது செய்த சுன்னாகம் பொலிஸார் , விசாரணையின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.