Designed by Iniyas LTD
இத்தாலியிலிருந்து வந்தவரை கடத்தி அடி உதை!
இத்தாலியிலிருந்து கடந்த 23ஆம் திகதியன்று நாடு திரும்பியவர் தனது வீட்டிலிருந்தபொழுது இனந்தெரியாத மூவரடங்கிய குழுவினரால் கடத்தப்பட்டு , தாக்குதலுக்கு இலக்கான நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தொடர்புடைய பதிவு
குறித்த சம்பவம் சிலாபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கடத்தி, விடுவிக்கப்பட்டவர், சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றார். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும், நபரொருவரை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளதாக தெரிவித்த ஸ்ரீ பொலிஸார், மேலும் இருவரை தேடி வருவதாகவும் தெரிவித்தனர்.
இத்தாலியில், இடம்பெற்றதாகக் கூறப்படும் கொடுக்கல், வாங்கலில் ஏற்பட்ட முரண்பாடே இந்த கடத்தலுக்கு காரணமென தெரிவித்த ஸ்ரீ பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருவதாகவும் தெரிவித்தனர்.