Designed by Iniyas LTD
இத்தாலியில் குடியேறுபவர்களுக்கு 2 ஆயிரம் யூரோ உதவித்தொகை…
இத்தாலியில் உள்ள கண்டேலா (candela) என்ற சிறிய ஊரில் குடியேறுபவர்களுக்கு 2 ஆயிரம் யூரோக்கள் உதவித் தொகை வழங்கப்படும் என அவ்வூரின் மேயர் அறிவித்துள்ளார்.
கண்டேலாவில் இருந்து ஏராளமானோர் வசதி வாய்ப்புகளை விட்டு பெருநகரங்களுக்கு குடியேறிய நிலையில் தற்போது அங்கு 2 ஆயிரத்து 700 பேர் மட்டுமே வசித்து வருகின்றனர்.
இதேவேளை குறித்த ஊரில் 1990களில் சுமார் 8 ஆயிரம் பேர் வசித்து வந்ததாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் பழைய எண்ணிக்கையை கொண்டு வர வேண்டும் என நடவடிக்கை எடுத்து வரும் அந்த ஊரின் மேயர் நிக்கோலா காட்டா கண்டேலாவில் அங்கு குடியேறுபவர்களுக்கு இந்த உதவித் தொகை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
அந்த ஊரில் நிரந்தர குடிமகனாக இருக்க ஒப்புக் கொண்டு வாடகைக்கு ஒரு வீட்டை அமர்த்தி ஆண்டுக்கு 7 ஆயிரத்து 500 யூரோ சம்பாதிக்க முடிந்தால் ,
இந்த உதவித் தொகையைப் பெற முடியும் என்பதோடு . பல்வேறு வரிச்சலுகைகளும் அளிக்கப்படும் அறிவிக்கபட்டுள்ளது.
