Designed by Iniyas LTD
25 வருடங்களுக்குப் பிறகு இத்தாலியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு அனுப்பட்ட சடலம்…
இத்தாலியில் மரணமடைந்த யாழ் சாவகச்சேரியை சேர்ந்த எம்.ஸ்றீபன் யோகி என்பவரின் சடலம் சுமார் 25 வருடங்களுக்குப் பிறகு இன்று அவரது சொந்த ஊரிற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்த எம்.ஸ்றீபன் யோகி என்பவர் இத்தாலி நாட்டில் தொழில் புரிந்து வந்தநிலையில் கடந்த 1994 ம் ஆண்டு மே மாதம் 24 ம் திகதி அவருடைய 49 வது வயதில் இத்தாலியில் மரணமடைந்துள்ளார்.
அன்றைய காலகட்டத்தில் தமிழீழ பகுதிகளில் ஶ்ரீலங்கா இராணுவத்தின் ஆக்கிரமிப்பு யுத்தம் தீவிரமாக இடம்பெற்றுக் கொண்டிருந்த காரணத்தினால் இறந்தவரின் உடல் இத்தாலியில் 25 ஆண்டுகளுக்கு பாதுகாப்பாக வைக்க அவரது உறவினர்கள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இந்நிலையில் நாட்டில் யுத்தம் நிறைவுக்கு வந்தாலும் 25 வருடங்கள் நிறைவடையாமல் உடலினை பொறுப்பேற்பதில் சட்டசிக்கல்கள் ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் 25 வருடங்கள் நிறைவடைந்த நிலையில் இறந்தவரின் உடல் இன்று அதிகாலை யாழ்ப்பாணம் எடுத்து செல்லப்பட்டு சாவகச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது