Designed by Iniyas LTD
இந்தியப் பிரதமர் மோடியை சந்தித்த கூட்டமைப்பு தலைவர்கள்!
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இந்தியப் பிரதமரின் பயணத்தின் முடிவில், இன்று மாலை இந்தச் சந்திப்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இடம்பெற்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இந்தியப் பிரதமருடன், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர், இந்தியத் தூதுவர் தரன்ஜித்சிங் சந்து உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
கூட்டமைப்புடனான சந்திப்புகளை முடித்துக் கொண்டு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விமானம் மூம் புதுடெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார்.



