Designed by Iniyas LTD
இந்தியா:டெல்லி மாநில புதிய சட்ட மந்திரியாக கபில் மிஸ்ரா நியமனம்
சட்டப்படிப்பு படித்ததாக போலி சான்றிதழ் வைத்திருந்த வழக்கில் டெல்லி மாநில சட்டமந்திரி ஜிதேந்தர் தோமர் நேற்று அம்மாநில போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்த அவர், முதல்வர் கெஜ்ரிவாலிடம் கடிதம் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் டெல்லியின் புதிய சட்ட மந்திரியாக அக்கட்சி எம்.எல்.ஏ.வும், குடிநீர் வாரிய துணைத்தலைவருமான கபில் மிஸ்ராவை நியமித்து முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். இன்று பிற்பகல் 3 மணியளவில் ஆளுநர் நஜிப் ஜங்கை சந்திக்க உள்ள கெஜ்ரிவால், அவரிடம் தோமரின் ராஜினாமா கடிதம் மற்றும் கபில் மிஸ்ராவை சட்ட மந்திரியாக நியமித்ததற்கான கடிதம் ஆகியவற்றை சமர்ப்பிக்க உள்ளார்.