Designed by Iniyas LTD
டெல்லியில் பா.ஜ.க நாடாளுமன்ற எம்.பிக்கள் கூட்டம் – மோடி பங்கேற்பு
பா.ஜ.க நாடாளுமன்ற எம்.பிக்கள் கூட்டம் டெல்லியில் கூடியது. இதில் பிரதமர் நரேந்திரமோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டதொடர் துவக்கத்தில் குடியரசுத் தலைவர் ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எம்.பி.க்கள் பேசி வருகின்றனர். அவ்வகையில், இன்று பிரதமர் நரேந்திர மோடி பேசும் போது மாநிலங்களவை உறுப்பினர்களாக உள்ள காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைவரும் நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டும் என அக்கட்சியின் நாடாளுமன்ற கொறடா உத்தரவிட்டுள்ளார். அநேகமாக, பிரதமரின் பேச்சுக்கு பதிலடி கொடுக்க காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.