தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இந்தியாவில் ஆண்டுதோறும் புகையிலை புற்றுநோயால் 10லட்சம் பேர் உயிரிழப்பு

இந்தியாவில் புகையிலை புற்றுநோயால் ஆண்டுக்கு 10 லட்சம் பேர் உயிரிழப்பதாக தலை மற்றும் கழுத்து அறுவை சிகிச்சை மருத்துவநிபுணர் டாக்டர்.விஷால்ராவ் தெரிவித்துள்ளார்.

smokingபெங்களூரு, எலஹங்காவிலுள்ள ஆயுதபோலீஸ் பயிற்சி பள்ளியில் வெள்ளிக்கிழமை நடந்த சிகரெட் மற்றும் இதர புகையிலைப்பொருள் சட்டம், 2003-ஐ அமலாக்குவது குறித்த பயிலரங்கில் கலந்துகொண்டு அவர் பேசியது: சிகரெட் மற்றும் இதர புகையிலைப்பொருள்கள் சட்டத்தை தீவிரமாக அமலாக்க வேண்டியது அவசியம். பொது இடங்களில் மட்டுமல்ல, புகையிலை பொருள்கள் எதையும் மனிதர்கள் உட்கொள்ளக்கூடாது.

மேலும் புகையிலையால் கிடைக்கும் அற்ப சந்தோஷத்தை காட்டிலும்,அதனால் நேரடியாக மற்றும் மறைமுகமாக ஏற்படக்கூடிய தீங்கு அளவற்றதாகும். யாரோ ஒருவர் புகைக்கும் சிகரெட், எங்கோ இருக்கும் ஒரு அப்பாவி குழந்தையை கூட பாதிக்கும் என்பதை நாம் மறந்துவிடுகிறோம். சமூகநலனில் அக்கறை கொண்டோர் புகைப்பழக்கத்தை துறந்துவிடுவார்கள். இந்தியாவில் புகையிலை புற்றுநோயால் ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள். இதனை தடுத்து நிறுத்தும் பொறுப்பு போலீஸ்படைக்கு உள்ளது. இந்த சமூக கடமையை செவ்வனே நிறைவேற்ற வேண்டும் என்று டாக்டர்.விஷால்ராவ் கூறியுள்ளார்.

புகையிலை புகையால் பாதிக்கப்பட்ட நளினி சத்தியநாராயணா பேசுகையில்,புகையிலை புகைப்பழக்கம் எதுவும் என்னிடம் இல்லை. ஆனால் என்னை சுற்றியுள்ளபகுதியில் புகைப்பழக்கம் உள்ளோர் அதிகமிருந்ததால் எனக்கு புற்றுநோய் ஏற்பட்டது. புகையிலையை உட்கொள்ளாமலேயே அதனால் பாதிக்கப்பட்ட என்னை போன்ற பலர் உள்ளனர். எந்த பாவமும் அறியாத என்னை போன்ற அப்பாவி மக்களை காப்பாற்ற புகைப்பழக்கத்தை அறவே ஒழித்துக்கட்ட போலீஸார் தீவிரமாக சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றார் அவர். நிகழ்ச்சியில் கர்நாடக போலீஸ் அகாதெமி இயக்குநர் பி.எச்.ரானே, துணை இயக்குநர் தரணிதேவி மாலகத்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினார்கள்.

Comments
Loading...