Designed by Iniyas LTD
இந்தியாவில் பாயும் பிரம்மபுத்திராவின் கிளை நதியை தடுத்து அணை கட்ட சீனா திட்டம்
பிரம்மபுத்திரா நதியின் வழித்தடத்தில், ஐந்து புதிய அணைகளை கட்ட, சீனா நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்தியாவுக்குள் பாயும் பிரம்மபுத்திராவின் நீர் வரத்து பாதிக்கும் என்பதால், சீனாவின் அணை கட்டும்முயற்சிக்கு, இந்தியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவுக்குள் பாயும், பிரம்ம புத்திராவின் முக்கிய கிளை நதியை, தற்போது, சீனா தடுத்து நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீர்மின் நிலையத்துக்கான அணை வேலைகள், முக்கிய கட்டத்தை எட்டியிருப்பதால், கிளை நதி யின் தண்ணீர் வரத்தை தடுத்து நிறுத்தியுள்ள தாக, சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உரி ராணுவ முகாம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுடன் ஆன சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை புதுப்பிப்பது குறித்து மறு பரிசீலனை செய்ய இந்தியா முடிவெடுத்துள்ளது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானின் நட்பு நாடான சீனா இந்தியாவுக்கு எதிராக இத்தகைய நடவடிக்கையை மேற் கொண்டுள்ளதாக கருதப்படுகிறது..
பிரம்மபுத்திராவின் கிளை நதியை மறித்து சீனா அணை கட்டுவதன் மூலம் இங்கு நீர்வரத்து மிகவும் குறையும் அதனால் இந்தியாவில் அசாம், அருணாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களும், வங்காள தேசமும் பெரிதும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.