தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இந்தியாவில் போக்கிமொன் விளையாட அனுமதி கேட்டு வழக்கு!

201609080606168854_pokemon-go-in-indian-court-for-hurting-religious-sentiments_secvpf-450x256போகிமான் விளையாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டு குஜராத் ஐகோர்ட்டில் ஒரு பொது நலவழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் மற்றும் ஆன்ட்ராய்டு இயங்குதள செல்போன்களில் இயங்கும் வகையில் ‘போகிமான் கோ’ என்ற விளையாட்டு வெளியாகி, உலகமெங்கும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த விளையாட்டை ஜி.பி.ஆர்.எஸ். வசதியுடன் கூடிய இணையதளம் மற்றும் கேமரா இணைந்த செல்போன்களில் தான் விளையாட முடியும்.

இந்த போகிமான் விளையாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டு குஜராத் ஐகோர்ட்டில் ஒரு பொது நலவழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கில் அலாய் தேவே என்பவர், “இந்த விளையாட்டில் பல்வேறு மதத்தினரின் வழிபாட்டு தலங்களில் முட்டைகள் இருப்பதாக காட்டப்படுகிறது” என குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி ஆர்.சுபாஷ் ரெட்டி மற்றும் வி.எம். பாஞ்சோலி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்குதாரர் சார்பில் வக்கீல் நாச்சிகெட் தவே ஆஜராகி வாதாடினார். அவர், “இந்த போகிமான் விளையாட்டை விளையாடுகிறவர்கள், பல்வேறு மதத்தினரின் கோவில்களில் காணப்படுகிற முட்டையின் வடிவத்தில் புள்ளிகளை பெறுகிறார்கள்.

முட்டை அசைவ உணவாகும். அப்படிப்பட்ட ஒன்றை இந்துக்கள், சமணர்கள் வழிபடும் இடங்களில் இருப்பதாக காட்டுவது இழிவான செயல்” என வாதாடினார்.

அதைத் தொடர்ந்து, ‘போகிமான்’ விளையாட்டை உருவாக்கியுள்ள அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள நியான்டிக் இன்க் நிறுவனம் மற்றும் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்புமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அவற்றின் பதிலைப் பொறுத்து, ‘போகிமான் கோ’ விளையாட்டுக்கு தடை விதிக்கப்படுமா என்பது தெரிய வரும்.

Comments
Loading...