தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இந்தியாவுக்கான தூதரக அதிகாரியாக ஒஸ்டின் பெர்னாண்டோ நியமனம்..

இந்தியாவுக்கான இலங்கை தூதராக தற்போது சித்ராங்கனே வாகிஸ்வரா பணியாற்றி வருகின்றார்.
இந்த நிலையில், புதிய தூதராக ஒஸ்டின் பெர்னாண்டோவை நியமித்து ஜனாதிபதி மைத்ரிபால சிறீசேனா உத்தரவிட்டுள்ளார்.
எனினும், உயர் பதவி நியமனங்களுக்கான நாடாளுமன்ற கமிட்டி ஒப்புதல் வழங்கப்பட்ட பின்னர் அவர் பொறுப்பேற்பார் எனவும் தெரிவிகப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்ரிபால சிறீசேனாவிடம் செயலாளராக பணியாற்றிய ஒஸ்டின் பெர்னாண்டோ சமீபத்தில் தனது பதவியை ராஜீனாமா செய்திருந்தார்.
இதேவேளை , அதிபரின் ஆலோசகராகவும் கிழக்கு மாணத்தின் கவர்னராகவும் ஒஸ்டின் பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Loading...