Designed by Iniyas LTD
யாழ். செம்மணி வீதியில் புதிதாக மனித எலும்புக் கூடுகள் ….
யாழ். செம்மணி வீதியில் புதிதாக மனித எலும்புக் கூடுகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
குறித்த பகுதியில் நீர் தாங்கி ஒன்று அமைக்கப்பட்டு வரும் நிலையில்,நேற்றையதினம் அங்கு அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதன்போது, அங்கு எலும்புக் கூடுகள் காணப்பட்டதையடுத்து அகழ்வு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், இன்று யாழ். நீதிமன்றின் அனுமதியுடன், எலும்புக் கூடுகளை மீட்கும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது..
இதேவேளை, அந்த பகுதிக்கு தற்போது பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..
