தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இந்தியா- தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் நாளை தொடக்கம்

cricketஇந்திய- தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மொஹாலியில் நாளை தொடங்குகிறது.

 தென்னாப்பிரிக்க அணியில் காயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுமினி விளையாடவில்லை. வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மாவுக்கு ஒரு போட்டியில் கலந்து கொள்ள தடைவிதிக்கப்பட்டுள்ளதால் முதல் டெஸ்டில் அவர் விளையாடவில்லை. தொடக்க வீரர்களாக ஷீகர் தவானும், முரளி விஜய் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 கேப்டன் விராட் கோலியுடன், சேட்டேஸ்வர் புஜாரா, ரோகித் ஷர்மா ஆகியோர் மத்திய வரிசை வீரர்களாக களமிறங்கவுள்ளனர். ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவும் முதல் டெஸ்ட்டில் களமிறக்கப்படவுள்ளார்.

 தென்னாப்பிரிக்க அணியுடனான ஒருநாள் மற்றும் ட்வெண்டி ட்வெண்டி தொடர்களை இந்திய அணி ஏற்கனவே இழந்துள்ளது. இந்த நிலையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை கைப்பற்றும் முனைப்புடன் விராட் கோலி தலைமையினான இந்திய அணி களம் காண்கிறது.

Comments
Loading...