தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழக மீனவர்கள் மீது புதிய வழக்குப்பதிவு : இலங்கை கடற்படை

tn fishermanசெப்டம்பர் 9-ஆம் தேதி இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட நாகையை சேர்ந்த தமிழக மீனவர்கள் மீது புதிய வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையின் ரோந்து படகினை சேதப்படுத்தியதாக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

 இந்த வழக்கில் தமிழக மீனவர்கள் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்களை நவம்பர் 18 வரை சிறையிலடைக்க கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 இந்த ‌மீனவர்கள் மீது எல்லை தாண்டியதாக ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர்கள் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதால் தமிழக மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Comments
Loading...