தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இந்தியா: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை ஜூலை 3-வது வாரத்தில் தொடங்க மத்திய அரசு முடிவு

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை ஜூலை 3-வது வாரத்தில் தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

parliament-of-indiaஇந்த கூட்டத்தொடரை ஆகஸ்ட் 2-வது வாரம் வரை நடத்த முடிவு செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்ற விவகாரத்துத்துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடுவிடம் விவாதித்தாகவும் தெரிகிறது. அத்துடன் நிலுவையில் உள்ள அவசர மசோதாக்களை நிறைவேற்றுவது குறித்து, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியிடம், பிரதமர் மோடி ஆலோசித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் மழைக்கால கூட்டத்தொடரில் நிதி மோசடி விவகாரத்தில் சிக்கி இங்கிலாந்தில் தலைமறைவாக வாழும், ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா உதவிய விவகாரத்தை எழுப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளதால், அதனை எதிர்கொள்வது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் மத்திய அமைச்சர்களுடன் மோடி விவாதித்ததாகவும் கூறப்படுகிறது.

அதேவேளையில் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பதவியேற்று ஒராண்டு நிறைவடைந்த நிலையில், மத்திய அரசு மீது எழுந்துள்ள இந்த சர்ச்சைக்குரிய புகாரை நாடாளுமன்றத்தில் பலமாக எழுப்ப காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன.

Comments
Loading...