Designed by Iniyas LTD
இலங்கை புத்தப்பூர்ணிமா விழாவில் பங்கேற்கவுள்ளார் பிரதமர் மோடி !
புத்தப்பூர்ணிமா விழா பௌத்த நாடுகளில் ஆண்டுதோறும் மே மாதத்தில் வரும் முழுபெளர்ணமியையொட்டிய ஞாயிற்றுக் கிழமைகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெளத்த நாடுகளில் ஒன்றான இலங்கையில், முதல்முறையாக இந்த விழாவை மே மாதம் 12-ம் தேதி கொண்டாடுகிறது.
இவ்விழாவில் பங்கேற்குமாறு பல்வேறு உலகநாடுகளின் தலைவர்களுக்கு இலங்கை அழைப்பு விடுத்துள்ளது. புத்த பூர்ணிமா விழாவில் இந்தியா, சீனா, ஜப்பான், தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம், மியன்மர், திபெத், பூடான், மங்கோலியா மற்றும் பௌத்த மதத்தை பின்பற்றும் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்க உள்ளனர்.
புத்தப்பூர்ணிமா விழாவில் பங்கேற்பதற்காக வரும் மே மாதம் பிரதமர் மோடி இலங்கை செல்கிறார். விழாவில் பங்பேற்பதை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளதாக இலங்கை அமைச்சர் விஜயதாசா ராஜபக்சே கூறியுள்ளார்.
இந்த விழாவை ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரிக்க உள்ளது குறிப்பிடதத்க்கது.