தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இந்தியா மீது தீவிரவாத தாக்குதல் தொடரும்!

showImageInStoryகாஷ்மீர் பிரச்­சினை தீரும்­வரை இந்­தி­யாவில் தீவி­ர­வா­திகள் தொடர்ந்து தாக்­குதல் நடத்­து­வார்கள் என்று பாகிஸ்தான் முன்னாள் ஜனா­தி­பதி பர்வேஷ் முஷாரப் தெரி­வித்­துள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் ஜனா­தி­பதி பர் வேஷ் முஷாரப் இந்­தியத் தொலைக்­காட்சி சேவை ஒன்­றுக்கு வழங்­கிய பேட்­டி­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,

முக்­கி­ய­மாக கரு­தப்­படும் காஷ்மீர் பிரச்­சினை தீரும் வரை இந்­தியா மீதான தீவி­ர­வா­திகளின் தாக்­குதல் தொடரும். பொது மக்­க­ளுக்கு பாகிஸ்தான் இரா­ணுவம் தீவி­ர­வாதப் பயிற்சி அளிக்­க­வில்லை. எங்­களின் உளவு அமைப்­பான ‘ஐ.எஸ்.ஐ.’ நிறு­வனம் ஜெய்ஷ் – இ – முஹ­மது, – லஸ்கர் -இ -தொய்பா உள்­ளிட்ட தீவி­ர­வாத அமைப்­பு­க­ளுக்கு பயிற்சி அளித்து அனுப்­பு­கி­றது.

பாகிஸ்­தானில் காஷ்மீர் பிரச்­சினை உணர்வு பூர்­வ­மாக உள்­ளது. அப்­பி­ரச்­சி­னையை நாங்கள் கைவி­டு­வ­தாக இல்லை. அந்த பிரச்­சி­னையை நீங்கள் விரும்­ப­வில்லை. எங்­ களை அழிக்­கவே பார்க்­கி ­றீர்கள். எங்­களை முட்­டாளாக்க நினைக்­கி­றீர்கள். எங்­களை ஆட்­டிப்­ப­டைக்க விரும்­பு­கி­றீர்கள்.

மேலும், தீவி­ர­வாதம், மும்பை, பதன் கோட் போன்ற பிரச்­ச­ினை­களை மட்­டுமே பேசு­கி­றீர்கள். உங்கள் நாட்டில் (இந்­தி­யாவில்) பாகிஸ்­தா­னுக்கு எதி­ரான எரிச்­ச­லையும் அச்­சத்­தையும் உரு­வாக்­கி­யுளீர்கள்.

மேலும், இந்திய உளவுத்துறையான ‘ரா’ ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தான் மீதுதாக்குதல் நடத்துகிறது எனவும் தெரி வித்துள்ளார்.

Comments
Loading...