Designed by Iniyas LTD
இந்திய அரசுக்கெதிராக ஸ்ரீலங்காவில் ஆர்ப்பாட்டம்! இந்தியா கண்டனம்
இந்திய அரசாங்கத்துக்கு எதிராக பாகிஸ்தானியர்கள், இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தியமையை இந்திய கண்டித்துள்ளது.
இது தொடர்பில் இந்தியா, தமது ஆட்சேபனையை தெரிவித்துள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தை இலங்கையில் உள்ள பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகரகமே ஏற்பாடுசெய்திருந்தாக இந்தியா குற்றம் சுமத்தியுள்ளது.
இந்தநிலையில் குறித்த விடயத்தை இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சின் கவனத்துக்குகொண்டு செல்ல இந்திய உயர்ஸ்தானிகரகம் எதிர்பார்த்துள்ளதாக தகவல்கள்வெளியாகியுள்ளன.
காஸ்மீரில் முஸ்லிம்களுக்கு எதிராக மனித உரிமைமீறல்கள் இடம்பெறுகின்றன என்று குற்றம் சுமத்தியே இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை தாம் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அனுசரணை வழங்கியமையை பாகிஸ்தானியஉயர்ஸ்தானிகரகமும் ஏற்றுக்கொண்டுள்ளது
காஸ்மீரில் மேற்கொள்ளப்படும் கொலைகளுக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடுசெய்யப்பட்டதாக அது குறிப்பிட்டுள்ளது.