Designed by Iniyas LTD
இந்திய எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறல்; தொடரும் துப்பாக்கிச் சூடு
காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறி இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றுள்ளன. அதனை தடுக்க இந்திய பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர்.
இன்று அதிகாலை இந்திய நிலைகளை நோக்கி சிறிய துப்பாக்கிகளால் பாகிஸ்தான் படையினர் துப்பாக்கியால் சுட்டதாகவும் அதற்கு அதே வகை காலிபர் ஆயுதங்களை பயன்படுத்தி பதிலடி கொடுத்து வருகிறது என்று பாதுகாப்பு அமைச்சக ஊடகத் தொடர்பு அதிகாரி கர்னல் மனீஷ் மேத்தா தெரிவித்தார்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்போ, காயங்கள் குறித்தோ எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
70-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டும் கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் படைகள் அத்துமீறியுள்ளது. நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலையங்கள், கடல்பகுதி, ரயில் நிலையங்கள் என்று எல்லா இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லையில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். அதற்கு இந்தியா ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்தனர். தற்போது இரு தரப்பினருக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்றுவருகிறது.
1990-களின் தொடக்கத்திலிருந்து ஆகஸ்ட் 14 மற்றும் 15 தேதிகிளில் இந்திய நிலைகள் மீது பாக்கிஸ்தான் படைகள் அத்துமீறி ஆயுத வன்முறையில் ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.